Sunday, April 3, 2011

News of Last month


பிப்ரவரி 23 அன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சென்னை பரங்கிமலை அருகே உள்ள பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேக தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருளுரையாற்றினார்கள். 
பிப்ரவரி 25 - ஸத்குரு தியாகராஜ ஆராதனை சபா சார்பில் பாலாஜி நகர் நங்கநல்லூரில் நடைபெற்ற ஆராதனை வைபவத்தில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கலந்து கொண்டு அருளுரையாற்றினார். போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கினார்கள். 
மார்ச் 2 - மஹாசிவராத்திரி - காலையில் விட்டலாபுரம் பாண்டுரங்கன் கோவிலில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் விசேஷ திருமஞ்சனமும் பூஜையும்  செய்து, வந்திருந்த அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள். மாலை மஹாரண்யம் கன்யாகுமரி ஆஞ்சநேயருக்கு வேதகோஷம் முழங்க, அபிஷேகம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு வடைமாலையும் சாற்றப்பட்டது. சாந்தீபனி குருகுல பிரின்ஸிபால் ஸ்ரீபாலாஜி சுந்தரகாண்டம் உபன்யாசம் செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இரவு ஆரமத்தில் ஐந்து கால மஹாசிவராத்திரி பூஜை, ஸ்ரீநடராஜருக்கு நடைபெற்றது.  
 மார்ச் 6 - மஹாரண்யம் - மதுரபுரி ஆரம வளாகத்தில் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதுவதற்காக மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்கள்.
மார்ச் 8,9 - திருச்சி - எட்டாம் தேதி ஸ்ரீரங்கம் ப்ரேமிக வேதாரமத்திற்கு ஸ்ரீஸ்வாமிஜி சென்றிருந்தார்கள். மறுநாள் ஒன்பதாம் தேதி மாலை திருச்சி ஏ.எம்.எ.மஹாலில், ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் ஒரு சிறப்பு மஹாமந்திர பிரார்த்தனை சத்சங்கம் நிகழ்த்தினார்கள். ஏராளமான அன்பர்கள் இதில் கலந்து கொண்டு பயனுற்றனர்.
மார்ச் 19 - சைதன்யமஹாபிரபு ஜெயந்தியை முன்னிட்டு மதுரபுரி ஆரமத்தில் மாதுரிஸகீஸமேத ஸ்ரீப்ரேமிகவரதனுக்கு புறப்பாடு ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
      ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமான சைதன்ய மஹாபிரபுவின் ஜெயந்தி தினம் வெகு விமரிசையாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நாமத்வார் அன்பர்களால் கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பதிலிருந்து இது எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்பது தெரிய வரும். தூத்துக்குடி மற்றும் குடியாத்தம் நகரங்களில் மட்டும் தலா ஐந்நூறு அன்பர்களும் விருதுநகர், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, ஆம்பூர், பெரியகுளம் ஆகிய நகரங்களில் தலா இருநூற்றி ஐம்பது அன்பர்களும், கடலூர், திருச்சி, வத்தலகுண்டு, சிவகாசி, ஸ்ரீபெரும்புதூர், பாண்டிச்சேரி, கோவூர், சைதன்யகுடிரம் (கோவிந்தபுரம்)  ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரும், சென்னையில் அண்ணாநகர், அயனாவரம், கொடுங்கையூர், பட்டினப்பாக்கம், பம்மல், கே.கே.நகர், மதுரபுரி ஆஸ்ரமம் உள்ளிட்ட பல இடங்களில் மட்டும் சுமார் ஆயிரம் அன்பர்களும் கலந்து கொண்டனர். இது தவிர, மதுரை, சிங்கப்பெருமாள் கோவில், கலட்டுபேட்டை, உசிலம்பட்டி, திருப்பூர், தாராபுரம், அம்பாசமுத்திரம், ராணிப்பேட்டை, அணைக்கட்டு, திருத்துறைப்பூண்டி, சேலம், தருமபுரி. கொடுங்கையூர், காரைக்குடி, மங்களூர், வாலாஜா, வேலூர், கோயம்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கம்பம் ஆகிய பல ஊர்களிலும் பல அன்பர்களும் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் அநேகமாக பல இடங்களில் அகண்டமாக காலையில் ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை  "ஹரே ராம" மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்றது. பல மையங்களில் வீதி பஜனையும், புறப்பாடும், குருபாதுகா பூஜையும், பிரவசனங்களும் நடைபெற்றது. இது தவிர, இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, எர்ணாகுளம் ஆகிய பல நகரங்களிலும், ஆதிரேலியா, மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்காசிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிதேசங்களிலும் அகண்ட மஹாபிரபுவின் ஜெயந்தியை முன்னிட்டு, அகண்டமாக மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்றது. எவரால் உலகத்தின் நன்மைக்காக மஹாமந்திர கீர்த்தனம் அருளப்பட்டதோ  அவரது ஜெயந்தி தினம் இப்படி சிறப்பாக கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. இம்மையங்களில் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக மஹாமந்திர கீர்த்தனமும், பிரார்த்தனையும் செய்யப்பட்டது. 
மார்ச் 19 - சைதன்யமஹாபிரபு ஜெயந்தி - அமெரிக்கா ஹூடன் நாமத்வார் ஒருவருடம் முன்பு, சைதன்ய மஹாபிரபு ஜயந்தியன்று  துவங்கப்பட்ட ஹூடன் நாமத்வாரில் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இந்த கோலாஹலமான வைபவத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டனர். அகண்டமாக மஹாமந்திர கீர்த்தனமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெக்சா மாகாண மேயர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், எளியோருக்கு உதவியும், அன்னதானமும் மிக விமரிசையாக செய்யப்பட்டது.
மார்ச் 20 - அம்மாளு அம்மாள் மாரக தினம் -பங்குனி உத்திரம் -சென்னை ப்ரேமிக பவனத்தில் கும்பகோணத்தில் வாழ்ந்த அபார பக்தை அம்மாளு அம்மாவின் முதல் மாரக தினம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் முன்னிலையில் அனுஷ்டிக்கப்பட்டது. மார்ச் 20 - சிங்கப்பெருமாள் கோவில் - T.E.G.நித்திய திருமணமண்டபத்தில் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதுவதற்காக மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சென்னை குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடியை சார்ந்த ஸ்ரீபம்மல் பாலாஜி, ஸ்ரீபாலாஜி ராமச்சந்திரன், ஸ்ரீஹரேராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 21 - 27 - சென்னை நாரதகானசபாவில் பக்த விஜயம் உபன்யாசம் - ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் நிகழ்த்தினார்கள். பகவன்னாம போதேந்திரர், ஸ்ரீதரஅய்யாவாள், மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகள், புரந்தரதாசர், பக்த மீரா, ஸந்த் துக்காராம், ஜயதேவர் ஆகிய பக்தர்களின் சரித்திரங்களை அருளுரையாக வழங்கினார்கள். அனைத்து நாட்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.

No comments:

Post a Comment