இந்த உலக வாழ்க்கையே மிகவும் துன்பகரமானது. இதில் சுதந்திரத்திற்கு இடமில்லை. தர்மத்தைச் செய்வது, பொருளை நாடுவது, இன்பத்தை தேடுவது என்று மூன்றும் சேர்ந்தே செய்ய வேண்டி உள்ளது. அப்படி செய்யும்போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. இதை தவிர்ப்பதற்காக சிலர் "மோக்ஷத்தை நாடுவது உயர்ந்தது" என்கின்றார்கள். ஆனால், அதுவோ எல்லோராலும் அடையக்கூடிய தன்மையுடையது அல்ல. அந்த பக்குவம் எல்லோருக்கும் கிட்டக்கூடியது அல்ல. இன்பத்தை அனுபவிப்பதோ என்றுமே தாற்காலிகமானது. பொருளை நாடினாலும் துன்பமே வருகிறது. பொருளை சம்பாதிப்பதும் கடினம். செலவு செய்யும் பொழுதும் மனக்கஷ்டம். அதை காப்பாற்றுவதிலும் கவலை. இழந்தாலோ பெரும் கவலை. ஆகையால் எந்த வழியில் பார்த்தாலும் இந்த உலக வாழ்க்கையில் நிம்மதிக்கு இடமில்லை. - மகாபாரதம்
No comments:
Post a Comment