Wednesday, February 2, 2011

Madhuramurali Feb2011 NEWS

ஜனவரி 1 - தஞ்சாவூர் மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை - தமிழரசி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் இதில் கலந்துகொண்டு "இதோ தீர்வு" என்ற தலைப்பில், மஹாமந்திரத்தின் ஏற்றத்தையும், தற்காலத்திற்கு அதன் அவசியத்தையும், அது அபரிமிதமான பலன்களை அள்ளித்தருவது குறித்தும் அருளுரையாற்றினார்கள். அன்றே ஸ்ரீவாமிஜி அவர்கள் தஞ்சாவூரில் ஏராளமான கோவில்களில் மஹாமந்திரத்தின் மஹிமையை மிக சிறப்பாக எடுத்துச்சொல்லிவரும் மஹிளாமண்டலியினரை கௌரவித்தார்கள். ஏறத்தாழ 4000அன்பர்கள் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டு, குருவருளும் திருவருளும் பெற்று சென்றனர். வந்திருந்த அனைத்து அன்பர்களுக்கும் பிரசாத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஜனவரி 4 - ஹனுமத் ஜெயந்தி அன்று மதுரபுரி ஆரமத்தில் கன்யாகுமரி ஜயஹனுமாருக்கு ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சிறப்பு அபிஷேகமும் வடைமாலை நிவேதனமும் செய்தார். இந்த ஹனுமார் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் ஒரு வரப்ரசாதியாக இருக்கிறார்.


ஜனவரி 12-18 - நாரதகான சபா - ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி இந்தியா மற்றும் டார் விஜய் டிவி இணைந்து நடத்திய நிகழ்ச்சி இது. இதில், ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் பாகவதத்தில் உள்ள கிருஷ்ணனின் லீலைகளை மிகவும் விரிவாக எடுத்து அருளினார். கிருஷ்ண ஜனனம் முதல் ருக்மிணி விவாஹம் வரை இருந்த இந்த உபன்யாசத்தில் கிருஷ்ணனின் வெண்ணை லீலைகள், கோவர்த்தன உத்தாரணம், காளிங்க நர்த்தன லீலை, கம்ச வதம், பக்தர்கள் சரித்திரம் ஆகியவற்றை மிகவும் விரிவாக ஸ்ரீவாமிஜி அவர்கள் பேசினார்கள். தினமும் அரங்கம் நிரம்பி வழிந்ததால் ஏராளமானோர் அரங்கத்திற்கு வெளியில் அமர்ந்து, ஸ்ரீஸ்வாமிஜியின் உபன்யாசத்தை கேட்டு பயனுற்றனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஆரம நிர்வாகி ஜஸ்டிஸ் ஸ்ரீஅருணாசலம், சென்னை நாரதகானசபா நிர்வாகி ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி, ஸ்டார் விஜய் டி.வி. Channel Head ஸ்ரீஸ்ரீராம் ஆகியோர் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். மேலும் விஜய் டி.வி. குழுவை சார்ந்த திரு.நாவண்ணன் மற்றும் அவரது ஒலி,ஒளி குழுவினருக்கும் ஸ்ரீவாமிஜி அவர்களால் நினைவு பரிசு அளிக்கப்பட்டது. "ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்" தினமும் காலை ஸ்டார் விஜய் டிவியில் காலை 6.20மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஜனவரி 24 2011 வத்தலகுண்டுவில் புதிய நாமத்வார் திறப்பு விழா குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடியை சார்ந்த ஸ்ரீசத்யநாராயணன் மற்றும் ஸ்ரீமுரளி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அன்று ஸ்ரீமுரளி நாமத்வாரின் அவசியத்தையும் குருநாதரின் மேன்மை குறித்தும் பேசினார். இதில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஜனவரி 21, 22, 24 தேதிகளில் சிவகாசி, அம்பாசமுத்திரம், பெரியகுளம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீசத்யநாராயணன் மற்றும் ஸ்ரீமுரளி அவர்கள் இதில் கலந்து கொண்டு பேசினர்.

ஜனவரி 26 2011 மும்பை ஷண்முகானந்தா ஹாலில் டாக்டர் சுப்ரமணியம் என்டோமெண்ட் லெக்சர் சபாவின் சார்பாக Practical Spirituality for Modern Times என்ற தலைப்பில் ஸ்ரீராமானுஜம் பேசினார். "முக்தி, ஆனந்தம், அன்பு இணைந்ததே ஆன்மீகம்" என்று அவர் விளக்கமாக பேசியதை ஏராளமானோர் கேட்டு பயனடைந்தனர்.

மலேசியாவில் சத்சங்கங்கள்- ஜனவரி23 - பிப்ரவரி 7வரை சென்ற வருடம் போலவே இவ்வருடமும் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் அருளாசிகளுடன், டாக்டர் பாக்யநாதன்ஜி அவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி சார்பாக சத்சங்கங்கள் நிகழ்த்த சென்றிருந்தார். ஜன23ஆம் தேதி ப்ரேமலதாஜி அவர்கள் இல்லத்தில், சீனநாட்டவர்களுக்கான மஹாமந்திர தியான வகுப்பும், அன்று மாலை ராஜேவரிஜி அவர்கள் இல்லத்தில் மஹாமந்திர கீர்த்தனையும் இருந்தது. 24ஆம் தேதி பங்சார் பள்ளியில் மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அன்று மாலை "Pure Life Society"இல் (Charitable institution Headed by Honourable "Dattin" Mother Mangalam) "அன்பே கடவுள்" என்ற தலைப்பில் சரணாகதியையும் பிரார்த்தனையும் குறித்து, ஸ்ரீவாமிஜி அவர்களின் உபதேசங்களை மேற்கோள் காட்டி, டாக்டர் பாக்யநாதன்ஜி பேசியது அனைவரையும் நெகிழ்த்தியது. ஜன-25ஆம் தேதி " Timeless Wisdom of our scriptures' தலைப்பில் கோலாலம்பூர் மல்டிமீடியா யூனிவர்சிட்டியில் நமது பாரம்பரிய நூல்களின் தத்துவத்தையும் தற்கால அடிப்படைகளையும் ஒப்பிட்டு டாக்டர் பாக்யநாதன்ஜி பேசியது அனைவரையும் சிந்திக்க வைத்தது. இதில் மஹாமந்திர கீர்த்தனமே கடவுளை அடைய தற்காலத்தில் சுலபமான வழி என்று அவர் பேசினார். ஜன26ஆம் தேதியன்று யுனைட்டன் யூனிவர்ஸிட்டியில் "மஹாமந்திரமும் மனோபலமும்" என்ற தலைப்பில் மிக அழகாக மஹாமந்திர கீர்த்தனம் எங்ஙனம் மனோபலத்தை வளர்க்கிறது என்பதை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியை யுனைட்டன் யூனிவர்சிட்டியை சேர்ந்த ஸ்ரீஅர்ஜுன் மற்றும் குளோபல் ஆர்கனசேஷன் ஃபார் டிவினிடி, மலேசியாவை சார்ந்த சுனிதாஜியும் மிக அழகாக ஒருங்கிணைத்திருந்தனர். 27ஆம் தேதி சுமார் 400 அன்பர்கள் முன்னிலையில் Klang Shirdi Center இல் குருநாதரின் கருணை மற்றும் தியாகம் குறித்து டாக்டர் பாக்யநாதன்ஜி பேசியது அனைவரையும் உருக வைத்தது. இந்நிகழ்ச்சிக்காக மிக அழகாக அந்த கோவிலை சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீவாமிஜி பற்றிய பேனர்களை ஆங்காங்கு வைத்திருந்தனர். Ladang Seaport School, Kelana Jayaவில் ஜன28ஆம் தேதி மாணவமணிகளுக்கான மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை இருந்தது. Desa Cempaka school, Nilai, Negeri Sembilan Stateஇல் 28ஆம் தேதி மாணவர்களின் தார்மீகப் பண்புகளை வளர்ப்பதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அவர் பேசினார். அன்றே குலபிலா முருகன் கோவிலில் அருணகிரிநாதர் குறித்தும், நாயன்மார்கள் குறித்தும் பேசினார். அதன்பின்னர் அங்கு மஹாமந்திர கீர்த்தனமும் இடம்பெற்றிருந்தது. ஜன29,30 தேதிகளில் மலேசிய கோலாலம்பூர் நாமத்வார் விழாக்கோலம் பூண்டிருந்தது. இருநாட்களிலும் ஸ்ரீஸ்வாமிஜியின் மதுரமரண சரித்திரத்தை மிக இனிமையாக டாக்டர் பாக்யநாதன்ஜி பேசினார். இதில் மதுரமான குருநாதரை பற்றி மரிப்பதான இந்த மதுரமரணமே, நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பமும் பயணமும் முடிவுமாகும் என்று அவர் அழகாக எடுத்துரைத்தார். கடலூரில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் குழந்தை பருவத்திலிருந்து, ஸ்ரீவாமிஜியின் சரித்திரத்தை பலரும் இன்புறும்படி பேசினார். (சிங்கப்பூர் சத்சங்கங்கள் பற்றிய விவரம் வரும் இதழில் இடம்பெறும்).


டிசம்பர் 2010-ஜனவரி 2011 மார்கழிமாதம் முழுவதும் "ஹரே ராம" நகர சங்கீர்த்தனம் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கேந்திரங்களில் பல அன்பர்களால் செய்யப்பட்டது. இதன் ஒரு அங்கமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுற்றி நான்கு வீதிகளிலும் ஜனவரி 9 அன்று அயனாவரம் ஸ்ரீபலராமன் பாகவதர் தலைமையில் ஏற்பாடாகி இருந்தது. சுமார் 4500அன்பர்கள் இதில் கலந்து கொண்டு கீர்த்தனம் செய்தனர். மதுரபுரி கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தை சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் பங்கேற்று மிக அழகாக நகரசங்கீர்த்தனம் செய்தனர். கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பொங்கலுக்கான புத்தாடையும் கொடுக்கப்பட்டது.


ஜனவரி மாதம் - குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி சார்பில் , சிவகாசி, வாலாஜாபேட்டை, விருதுநகர், சாத்தூர், சென்னை , திருச்சி , கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரைக்குடி, உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் மாணவமணிகளுக்கான கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடியை சார்ந்த ஸ்ரீபாக்யநாதன்ஜி மற்றும் ஸ்ரீராமானுஜம்ஜி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் தேர்வுகளை எளிதில் சந்திப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி ஊக்குவிக்கும் வண்ணம் உரையாற்றினர். சென்னையில் மட்டும் 3000மாணவமணிகளும் திருச்சியில் ஒரே நாளில் 4000மாணவமணிகளும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கூட்டு பிரார்த்தனைகளிலும் "ஹரே ராம" மஹாமந்திர கீர்த்தனம் இடம்பெற்று இருந்தது.

No comments:

Post a Comment