1. போதனம் யஸ்ய ஸததம் முரளீரவ ஸம்மிதம்
ஜனானாம் ஹ்ருதயம் ஸ்ப்ருஷ்ட்வா நந்தயத்யனிஸம் கலு
எவருடைய போதனாசக்தி, பேசும் குரல் புல்லாங்குழல் போல் (முரளி போல்) இனியனதாக இருந்துகொண்டு, கேட்போரின் ஹ்ருதயத்தை தொட்டு, உடனே ஆனந்தத்தை அளிப்பது கண்கூடாக உள்ளதோ, அவரே ஸ்ரீமுரளீதர வாமிஜி ஆவார்.
2. அஸ்ய க்ருஷ்ணே பராபக்தி: குரௌ பரதராபி ச
நாமஸங்கீர்த்தனே நிஷ்டா ஜன்மஜாதேவ ராஜதே
இவருக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடம் நிகரற்ற பராபக்தி அன்பும், ஸ்ரீகுருவினிடத்தில் மிக உயர்ந்த பக்தியும், நாமசங்கீர்த்தனத்தில் நிஷ்டையும் (ஸதா உள்ளுணர்வும், இம்மூன்றும்) பிறவியிலேயே தோன்றியதாக விளங்குகிறது!
3. தினே தினே ஸுப்ரபாதே "விஜயே" தூரதர்ஸனே
அஸய வாணீ ஸுமதுரா குஷ்யதே ஜனதாப்ரியா
பிரதிதினம் காலை வேளையில் "விஜய்" தொலைக்காட்சியில் இவரது மிகவும் இனிமையான வாணீயானது ஸர்வஜனங்களுக்கும் ப்ரியமாக கோஷிக்கப்படுகிறதன்றோ!
4. தசமகந்தஸாரோயம் பக்தஸுக்தி ஸமன்வித:
ஸஹரஸோ ஜனான் ஸர்வான் ப்லாவயன் நந்தஸாகரே
(ஸ்ரீமுரளீதரவாமிஜி அவர்களின்) இந்த தசமகந்த ஸாரம் (ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்) என்ற ஒரு வாரத்தின் பிரவசனம் திருஆழ்வார்களின் ஸூக்திகளுடன் ஒப்பிடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களை ஆனந்தஸாகரத்தில் மூழ்கச் செய்தது (என்பதில் ஐயமில்லை)!
5. "மத்பக்த ஏதத்விக்ஞாய மத்பாவாயோபபத்யதே"
ஸத்யாபிதேயம் உக்திர்ஹி முரளீதரஸூரிணா
"எனது பக்தன் என் தன்மையையே அடைகிறான்" என்ற கண்ணனின் கீதாவாக்கியம் ஸ்ரீமுரளீதர வாமிஜி அவர்களால் உண்மையாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டதன்றோ! (தன்மயம் - தான் உபாஸிக்கும் தெய்வம் உபாஸகருக்கு முழுமையான தனது தெய்வத்தன்மையை தந்து விடுகின்றது என்பது உபநிஷத்தின் ஸாரம்" -" யதா யதா உபாஸதே ததேவ பவதி")
6. பக்திர்ந்ருத்யதி ஹ்ருத்பத்மே யஸ்ய யேன ஸுரக்ஷ்யதே
தர்மோ விவமுகோ லோகே ஸோயம் ஜீயாத் ஸமார்புதம்
எவருடைய "ஹ்ருத்"பத்மத்தில் பக்தி நடனம் புரிகிறதோ, எவரால் பல பல தர்மங்கள் உலகம் முழுவதிலும் பரப்புவதன் மூலம் ஸம்ரக்ஷிக்கப்படுகின்றதோ, அத்தகைய ஸ்ரீமுரளீதர வாமிஜி அவர்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ ஸ்ரீக்ருஷ்ண க்ருபையை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment