உத்க்ஷேபணம் கர்பகதய பாதயோ: கிம் கல்பதே மாதுரதோக்ஷஜாகஸே
கிமதி நாதி வ்யபதேஸபூஷிதம் தவாதி குக்ஷே: கியதப்யநந்த:
"ஹே கிருஷ்ணா! உன்னை ஊனக்கண்ணால் அறிய இயலாது. ஞானக்கண் கொண்டல்லவா உன்னை அறிய முடியும்? தூலம், சூக்குமம், காரியம், காரணம் என்றும், இல்லை என்றும், இருக்கிறது என்றும் சொல்லப்படுகிற எந்த வஸ்துதான் உனக்குள் இல்லை? (எல்லாம் உனது வயிற்றினுள் அல்லவா இருக்கிறது. எதுவும் உனக்கு வெளியில் இல்லை). நானும் உனது வயிற்றிலேயே இருக்கிறேன். கர்ப்பத்திலிருக்கும் குழந்தை உதைப்பதை தாய் குற்றமாக கருதமாட்டாள் அல்லவா? (அதுபோல், ஸர்வேவரனான நீயும் ப்ரும்மதேவனான நான் செய்த குற்றத்தை சிசு செய்ததாக எடுத்துக்கொளல் வேண்டும்) உனது மஹிமையை அறிய சக்தியற்றவன் நான்" என்று ப்ரும்மா நெடுஞ்சாணாக கிருஷ்ணனின் கால்களில் நமகாரஞ்செய்து விண்ணப்பித்தார்.
-பாகவதம்-கந்தம் 10, அத் 14
No comments:
Post a Comment