Wednesday, February 2, 2011

மகான்களின் மகிமை


ஸ்வாமி அபேதானந்தா அவர்கள் செங்கல்பட்டில் ஒரு பக்தர் வீட்டில் தங்கி பஜனையும் உபன்யாசமும் செய்து வந்தார். ஸ்வாமியின் அழகிலும் உபன்யாசத்திலும் மயங்கிய ஒரு பெண், ஸ்வாமியின் மேல் தவறாக ஆசை கொண்டு, தன்னை ஸ்வாமி மணந்து கொள்ளும்படி வேண்டினாள். திடுக்கிட்ட ஸ்வாமி அபேதானந்தா, சட்டென நாளொன்றை சொல்லி அப்பொழுது வந்தால் திருமணம் செய்யலாம் என்று சொல்லி அனுப்பினார். ஸ்வாமிகளுக்கு ஆயுர்வேதமும் தெரியும். குறிப்பிட்ட நாளன்று கடுமையாக பேதி தரக்கூடிய மருந்தை மிக அதிகமாக உண்டார். வேறு ஒருவரெனில் மரணம் சம்பவித்திருக்கும். ஸ்வாமிக்கு மருந்தினால் அதிக பேதியானது; ரத்தமும் மலமுமாக வெளியேறியதை தனியாக ஒரு மூலையில் சேகரித்து வைத்தார். உடல் கடுமையாக அசதியாகி, மூலையில் படுத்து விட்டார். அதே சமயம் அந்தப் பெண்ணும் திருமணத்திற்காக எதிர்பார்ப்புடன் வந்தாள். ஸ்வாமி அவளிடம் "என்னிடமிருந்த எதை நேசித்தாயோ அதுதான் அங்கு இருக்கிறது. அதையோ அல்லது என்னையோ தேர்ந்தெடுக்கவும்" என ரத்தமும் மலமுமாக இருந்த மூட்டையை காட்டினார். அதை அலசிய அவள், தன்னால் ஸ்வாமிக்கு மிகுந்த துன்பம் வந்ததே என வருந்தினாள். ஸ்வாமியும் அவளுக்கு நல்வார்த்தைகள் கூறி உபதேசமும் செய்து அனுப்பினார். ஸ்வாமியின் நல்வார்த்தைகளால் திருந்திய அவள், மிகுந்த நேர்த்தியான வாழ்க்கை மேற்கொண்டு பின்னர் ஒரு யோகினியாகவே வாழ்ந்தாள். மஹான்களின் ஆற்றலையும் தன்மையையும் இச்சம்பவம் நன்கு காட்டுகிறது.
----------------------------------

இப்பேர்ப்பட்ட பரமபவித்ரமான ஸ்வாமி அபேதானந்தா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜி அவர்களின் அருளாணைப்படி சைதன்ய மஹாபிரபு நாமபிக்ஷாகேந்திரா வெளியிட்டு இருக்கிறது. அனைவரும் வாங்கி படித்து பயன் பெறவும்.

No comments:

Post a Comment