Sunday, April 3, 2011

Sanathana pudhir


சனாதனப் புதிர் - பகுதி - 26
-ஆத்ரேயன்

1.கங்கை, யமுனை நதிகள் ரிக் வேதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2.ரிக் வேதத்தில் அதிகமாக காணப்படும் இரண்டு நதிகளின் பெயர் என்ன?
3.இப்பொழுது நடைமுறையில் இருக்கும்  ஹரிச்சந்திர உபாக்யானத்தின் ஆதாரம் எங்கு காணப்படுகிறது?
4.28 விதமான நரகங்களைப் பற்றி ஒரு புராணம் விஸ்தரிக்கிறது. எந்த புராணம்? எத்தனை நரகங்கள்?
5.அம்பாளின் 108 பீடங்கள் எங்கு விவரிக்கப்படுகின்றன?

1.             முதல் நாள் யுகாதி ; சுக்ல பக்ஷ அஷ்டமி  - அசோக அஷ்டமி (துர்கா பூஜை) சுக்ல பக்ஷ நவமி- ராம நவமி ; கிருஷ்ண பக்ஷ பஞ்சமி - மத்ஸ்ய ஜயந்தி ; கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - வராஹ ஜயந்தி.
2.             ஸ்வயம்பு மனுவின் இரண்டாவது பெண். கர்தமரின் மனைவி - பத்து குழந்தைகள் - அருந்ததி , அனஸூயா , கபிலர் முக்கியமானவர்கள். கபிலர் தனது தாயான தேவஹூதிக்கு உபதேசம் செய்தார்.  கபில கீதை என்று அழைக்கப்படுகிறது (பாகவதம்  3-25-33)
3.             அஹன்யா- ரிக்வேதம்  ( 4.1.6 ; 8.69.2 )
4.             இவர் ஒரு பிராமணர். விஷ்ணு பக்தனின் சாபத்தால் பிருந்தாவனத்தில் மூங்கிலாக பிறக்கிறார். அந்த மூங்கில் வெட்டப்பட்டு, புல்லாங்குழலாக மாற, அதை பகவான் கிருஷ்ணன் இசைக்க, தேவவ்ரதன் என்ற பிராமணர் முக்தி அடைகிறார். (பத்ம புராணம் - பாதாள காண்டம் - சர்க்கம்  73 )
5.             சக்ரபுஷ்கரணி
6.             ஆரண்ய; ஆஸ்ரம; பாரதி; கிரி; பர்வத; பூரி; சரஸ்வதி; சாகர; தீர்த்த; வன;
7.             கிருஷ்ண யஜூர் வேதம் -  33 ஸ்லோகங்கள் - 5 மந்திரங்கள்.
8.             சந்திர வம்சத்து அரசனான ப்ரதீபனின் பிள்ளை. இவருடைய தம்பியின் பெயர் சாந்தனு. தேவாபி குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டு இருந்ததால், துறவறம் மேற்கொண்டார். பீஷ்மரின் பெரியப்பா.
9.             அங்க தேசத்தின் தலைநகர் - இராமாயண காலத்தில் - ரோமபாதர் -மஹாபாரத காலத்தில் - கர்ணன் பீஹாரில் -  பாகல்பூர் அருகில் உள்ள நாத்நகர்.
10. அதர்வ வேதம். 32 மந்திரங்கள். இவைகளில் நவாக்ஷரி, பஞ்ச தசாக்ஷரி முதலியவை அடங்கும்.

No comments:

Post a Comment