ஸ்ரீரங்கம் S.B.காலனியில் 17.4.2006ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு கிருஷ்ண யஜூர் வேதபாடசாலையும் ரிக்வேத பாடசாலையும் நடந்து வருகின்றது. மேற்படி பாடசாலைக்கு ஸ்ரீரங்கம் ராமச்சந்திரன் அவர்கள் தன் வீட்டை கொடுத்திருந்தார். அவர்தான் சமீபகாலம் வரை பாடசாலையையும், சகல பொறுப்பையும் நிர்வகித்து வந்தார். ஆரோக்ய குறைவு காரணமாகவும், அடுத்த தலைமுறையை உற்சாகப்படுத்தவும் பாடசாலை நிர்வாகத்தின் சகல பொறுப்பையும் தத்வமஸி கனபாடிகளிடம் ஒப்படைத்து விட்டார். உதனேவர பட் ரிக்வேதத்திற்கு அத்யாபகராக உள்ளார். மேற்படி பாடசாலை 127/24, வடக்கு உத்திர வீதி, ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதனுடைய திறப்பு விழா மாசி மகம் (பிப்ரவரி 18)அன்று நடந்தது. இதற்கு பிரேமிக வேதாரமம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஸ்ரீஸ்ரீஅண்ணாவும் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயரும் பொன் அடி சாற்றி அனுக்ரஹித்தார்கள். வேதத்தின் பெருமையையும் அதை ரக்ஷிக்க வேண்டிய அவசியத்தையும் ஸ்ரீஸ்ரீஅண்ணாவும் ஜீயரும் அழகாக எடுத்துரைத்தார்கள். ஸ்ரீஸ்ரீஅண்ணா அவர்களின் திருக்கரங்களால் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீஸ்வாமிஜியின் P.R.O. ஸ்ரீவெங்கடேசன் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அழகாக செய்திருந்தார்.
பிப்ரவரி 5, 6 தேதிகளில் குடியாத்தம் ராஜகோபால் நாயுடு ஆஸ்தீக சமாஜத்தில் பகவத்கீதை குறித்து ஸ்ரீஸ்வாமிஜி அருளுரை நிகழ்த்தினார்கள். இதே சமயத்தில் வளசை, டி.பி.பாளையம், கல்பாடி, கனவை மோட்டூர் என்ற அருகிலுள்ள கிராமங்களுக்கும் ஸ்ரீஸ்வாமிஜி விஜயம் செய்து அங்கு கிராம மக்களுடன் சத்சங்கம் செய்து வந்தார்கள். பிப்ரவரி 8 அன்று மதுரபுரி ஸ்ரீகல்யாணஸ்ரீனிவாசபெருமாளின் பிரதிஷ்டாதினம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது. காலையில் பெருமாளுக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரத்தில் அழகாய் விளங்கினர். வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீவாமிஜி அவர்கள் தமது திருக்கரங்களாலேயே தீர்த்தபிரசாதம் வழங்கினார்கள். பிப்ரவரி 17 அன்று கன்யாகுமரி ஜயஹனுமாருக்கான 68நாள் ஏகதின சுந்தரகாண்ட பாராயணம் நிறைவுபெற்றது. இதில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கலந்துகொண்டு ஹனுமாருக்கு வடைமாலை சாற்றி பூஜை செய்தார்கள்.பிப்ரவரி 10 அன்று சென்னை பாரதிதாசன்காலனி புவனேவரி அம்மன் கோவில்- டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 9வரை 50நாட்கள் தினமும் அன்பர்களின் இல்லங்களில் மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்று வந்தது. இதன் பூர்த்தி அன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் புவனேவரி அம்மன் கோவில் வளாகத்தில் அருளுரை வழங்கினார்கள். பிப்ரவரி15ஆம் தேதியன்று சென்னையை அடுத்த கொடுங்கையூர் சென்று ஸ்ரீஸ்வாமிஜி அன்பர்களிடையே சத்சங்கம் செய்து வந்தார்கள்.
பிப்ரவரி 19,20 அன்று வேலூர் அருகே உள்ள அகரம் ஸ்ரீவாரணவல்லி ஸமேத ஸ்ரீகஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீஅன்னபூரணிவிசாலாக்ஷி ஸமேத ஸ்ரீகாசிவிவநாதஸ்வாமி கோவில்கள் கும்பாபிஷேகம், ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அகரத்தில் 19ஆம் தேதியன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கஜேந்திர மோக்ஷம் குறித்து அருளுரையாற்றினார்கள்.
பிப்ரவரி 23 அன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சென்னை பரங்கிமலை அருகே உள்ள பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருளுரையாற்றினார்கள். சிங்கப்பூரில் சத்சங்கங்கள் (பிப் 1-7) - பிப்ரவரி 1 அன்று சிங்கப்பூர் Yuvabharathi International ஸ்கூலில் டாக்டர் பாக்யநாதன்ஜி Timeless wisdom of scriptures என்ற தலைப்பில் பேசினார். இதில் சனாதன தர்மத்தின் கருத்துக்களையும் தற்கால அறிவியலையும் ஒப்பிடும் படங்களை கொண்டு மாணவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு விளங்கும்படி எடுத்து பேசினார். பிப் 2 அன்று தொழில் மற்றும் வர்த்தக சபை - Singapore Indian Chamber of Commerce and Industry முன்னிலையில் டாக்டர் பாக்யநாதன்ஜி தன்னுள் இருக்கும் ஆன்மாவை அடையாமல் ஒருவன் வெளியில் காரியங்களை செய்வதற்காக மட்டும் முயலுவது வாழ்க்கையை வீணடிப்பதாகும் என்று பேசினார். இதில் சுவையான சிறுகதைகளை கொண்டு அனுபவமும், அறிவின் மூலம் உணருவதும் வெவ்வேறு என்று பேசினார். இதில் யாரொருவர் ஏற்கனவே தன்னுள் இருக்கும் ஆனந்தத்தை பெற்றுள்ளாரோ, அவரே அத்தகைய அனுபவத்தை பிறருக்கு தர இயலும் என்றும் அது குருவாகவே இருக்க முடியும் என்றும் அவர் பேசினார். பிப்ரவரி 3ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதி சிங்கப்பூர் Geylang சிவன் மற்றும் சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் மகாமந்திர கூட்டு பிரார்த்தனை டாக்டர் பாக்யநாதன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் டாக்டர் பாக்யநாதன் இறைவனை அடைய பல வழிகள் என்றும் அதில் இறை நாம கீர்த்தனமே மிகவும் உகந்தது என்றும், அதிலும் தற்காலத்திற்கு மஹாமந்திர கீர்த்தனமே மிக அவசியம் என்றும் பேசினார். பிப்ரவரி 3,5 தேதிகளில் மதுரமரணம் - My Guru as I See HIM - ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் திவ்யசரித்திரம் குறித்து ஸ்ரீஜெயச்சந்திரன், ஸ்ரீமதி ஹரிலக்ஷ்மி ஜெயச்சந்திரன் மற்றும் ஸ்ரீபாலசுப்ரமணியன், ஸ்ரீமதி உமா பாலசுப்ரமணியன் ஆகியோர் இல்லங்களில் பேசினார். பிப்ரவரி 3,4 தேதிகளில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் இயற்றியுள்ள கலிதர்ம உந்தியார் குறித்து பல இடங்களில் சத்சங்கங்கள் நிகழ்த்தினார். ஜனவரி 29 அன்று நெரூலில் (மும்பை) இந்திய தொழில் நிறுவனங்களின் செயலர்களுக்கான இன்ஸ்டிடியூட்டில் ஒரு ஆய்வரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீராமானுஜம்ஜி வேலை செய்யுமிடத்தில் மனமகிழ்ச்சியை எப்படி வளர்ப்பது (Happiness at work) மற்றும் தொழில் தர்மம் (Professional ethics) குறித்து பேசினார். தார்மீக தர்மங்களின்படி நடப்பதே மகிழ்ச்சிக்கும் சுய அங்கீகாரத்திற்கும் வழிகோலும் என அவர் பேசினார். இந்நிகழ்ச்சி GOD Mumbai Satsang சார்ந்த ஸ்ரீநடராஜன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அன்றே மும்பை அருகே அம்பர்நாத் வெங்கடேஸ்வரா கோவிலில், ஸ்ரீமதி சுதாகிருஷ்ணமூர்த்தி அவர்களால் ஒரு மஹாமந்திர சத்சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராமனுஜம்ஜி கலந்து கொண்டு ஸ்ரீஸ்வாமிஜி அவர்களது உபதேசங்களையும் மஹாமந்திரத்தின் பெருமையையும் விளக்கி பேசினார். ஸ்ரீமதிசரஸ்வதி அவர்கள் மும்பை நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று இருந்தார். பிப்ரவரி 20 அன்று ஸ்ரீராமனுஜம்ஜி பெங்களூரில்Dell international services, SLK software, Plan Visage corporation, Spearhead corporation, DNS Consultants போன்ற பல நிறுவனங்களில் Timeless wisdom for modern times என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை (workshop) நடத்தினார்.
No comments:
Post a Comment